என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் விபத்தில் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் படுகாயம்
    X

    கரூர் விபத்தில் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் படுகாயம்

    • மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் படுகாயம் அடைந்தார்
    • லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தளவாபாளையம்அருகே அய்யம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சுந்தரம் (55). இவர் காகிதபுரம் பகுதியில் சிலிண்டர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கேஸ் சிலிண்டர்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று சுந்தரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம்கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×