search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 120 அடி இருப்பில் உள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தற்போதைய நிலையில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திறக்கப்படும் நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    எனவே, காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் தனியாகவோ, கால்நடைகளுடனோ ஆற்றில் இறங்கவேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், காவிரி கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

    Next Story
    ×