search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை
    X

    பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை

    • டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது
    • சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை நடவடிக்கை

    வேலாயுத ம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சேமங்கி சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பா ளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்ப குதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளு க்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதிய வர்கள், பாலூட்டும் தாய்மா ர்கள், மாற்று த்திறனாளிகள் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.

    சிரட்டைகள் உரல்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நல்ல தண்ணீரில் உற்பத்தி யாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×