என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் பைக் மோதி சிறுவன் காயம்
    X

    குளித்தலையில் பைக் மோதி சிறுவன் காயம்

    • குளித்தலையில் பைக் மோதிய விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்
    • இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர்,

    குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., நடு வதியம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 44). இவரது மகன் சரண்குமார்(வயது 16) இருசக்கர வாகனத்தில் குளித்தலை நோக்கி சென்றார். சுங்ககேட் மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து அருகே வந்த பைக், சிறுவன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் சரண்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சிறுவனின் தந்தை கலையரசன் கொடுத்த புகார்படி, பைக்கை ஓட்டி வந்த வாலாந்தூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திக் பாலாஜி, பைக் உரிமையாளர் குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×