என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் புகழுரில் திடீர்ஆய்வு
- கரூர் மாவட்டம் புகழுரில், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- 2 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்பட உள்ள உணவு கூடத்திலும் ஆய்வு
வேலாயுதம்பாளையம்,
புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் திடீர்ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் உள்ள பழைய காகித ஆலை பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்னால் முதலமைச்சரின் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்காக உணவுகள் தயாரிப்பதற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இங்கு புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகள் என சுமார் 2000 பேருக்கு உணவு பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.இந்த சமையல் கூடத்தில் கம்யூனிட்டி கிச்சன் கட்டிடத்தையும். புகழூர் நகராட்சிக்கு சொந்தமான காகித ஆலைக்குபின்னால் உள்ள கந்தசாமி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் நுண் உரம் தயாரிக்கும் மையத்தினையும், மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் இயக்குனர் விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சிகளின் சேலம் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன், புகழூர் நகராட்சிஆணையாளர்(பொ) பால்ராஜ்,துப்புரவு ஆய்வாளர் வள்ளி ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.






