என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு
    X

    கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு

    • கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    வெள்ளியணை வடக்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் திருச்செல்வி (வயது 24). இவருக்கு பழனிச்சாமி என்பவருடன் திருமணமாகி 2 வயதில் மேனகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று திருச்செல்வி அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றினை திருச்செல்வி எட்டிப்பார்த்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

    இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் திருச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாந்தோணிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, திருச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×