என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

    • நடையனூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூர் பகுதி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கடையில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்யப்படுவதை பார்த்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×