என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்ற 9 பேர் கைது
    X

    குட்கா விற்ற 9 பேர் கைது

    • ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • போலீசாரின் ரோந்து பணியின் போது சிக்கினர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை, வெங்கமேடு, கரூர் டவுன், தோகைமலை ஆகிய பகுதிகளில், சட்டம் ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை, பொருட்களை விற்றதாக கந்தசாமி (வயது 72), குட்கா சாமிநாதன் (51), ஆனந்த் கிருஷ்ணா (54), செல்வம் (54), ராஜலிங்கம் (45), சங்கர் (48), அருண்குமார் (35), தமிழ்செல்வன் (30), கண்ணன் (62) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×