என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு:  எஸ்.பி. தகவல்
    X

    கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு: எஸ்.பி. தகவல்

    • கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்துள்ளார்
    • லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:


    கரூர் எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையின் போது 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாத 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகளை நீர் நிலைகள் அருகில் செல்வதையும், சிறார்களை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை அனுமதிக்காமல் ெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×