என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற 5 பேர் கைது
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினார்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற தாக, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன், பசுபதிபாளையம், தான் தோன்றிமலை பகுதிகளில், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் அப்துல்லா, ஆர்த்தி, பத்மசீலன் ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை, குட்கா பொருட்களை விற்றதாக ரவிச்சந்திரன் (வயது 38), சுப்பிரமணி (44), ரமேஷ் (49), ஆகிய மூன்று பேரை, கைது செய்தனர்.இதேபோல், குளித்தலை அருகே, வீரி யம்பாளையம் பஞ்., வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (44), எம். புதுப்பட்டியை சேர்ந்த ரமணன் (49) ஆகிய இருவரும், அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்றதாக, போலீ சாரால் கைது செய்யப்பட்டனர்.
Next Story