என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
  X

  சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
  • போலீசாருக்கு வந்த புகார்களின்படி நடவடிக்கை

  கரூர்:

  தோகைமலை போலீசாருக்கு வந்த புகார்களின்படி போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப் பட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி(வயது 36). தனது பெட்டிக் கடையில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். இதேபோல் கழுகூர் ஊராட்சி அ.உடையாப்பட்டியை சேர்ந்த காமராஜ்(வயது 59) என்பவரும் தனது கடையில் மது விற்பனை செய்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை(47) என்பவர் தனது வீட்டின் பின்புறமும், தங்கவேல் மனைவி மாரியாயி(41) என்பவர் தனது பெட்டிக்கடையிலும் மதுபானங்களை விற்பனை செய்துள்ளதை பார்த்த போலீசார் மலர்கொடி, காமராஜ், சின்னதுரை, மாரியாயி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×