என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1,675 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    1,675 பேர் மீது வழக்குப்பதிவு

    • குளித்தலை பகுதியில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,675 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • ரூ.18½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    கரூர்,

    குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிகபாரம் ஏற்றிவந்தது, மது அருந்தி வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது.தலைக்கவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட ஆயிரத்து 675 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×