என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடை அரங்கநாதர் கோவில் திருவிழா-தேர் பராமரிக்கும் பணி தீவிரம்
- மாசி மாதத்தில் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- தேரை சுற்றிலும் இருந்த தகரங்கள் மற்றும் கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக காரமடை அரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசி மக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வருடங்களாக கொரோனாவால் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் கட்டுப்பா–டுகளுடன் அனுமதி–க்கப்பட்டு வந்தனர்.இந்த ஆண்டு மாசி தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனையொட்டி நாள்தோறும் அரங்கநாதர் பல்வேறு உற்சவ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இதை தொடர்ந்து மார்ச் மாதம் 4-ந் தேதி ஸ்ரீபெட்டதெம்மன் அழைப்பு, 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
பின்னர் முக்கிய விழாவான திருத் தேரோட்டம் மார்ச் 6-ந் தேதி மாலை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த தேரை சுற்றிலும் இருந்த தகரங்கள் மற்றும் கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது தேர் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.






