என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

- இந்த ஆண்டு இதுவரை 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்
- மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில், மே.9-
குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கஞ்சா விற்பனை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் கைதான வர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோவாளை தாலுகா அருமநல்லூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 41). தற்போது திருவட்டார் தாலுகா மணலிக்கரை அருகே உள்ள அண்டம் பாறையில் வசித்து வந்த இவர், கொலை வழக்கில் கைதாகி நாகர்கோவில் ஜெயிலில் உள்ளார்.
இந்த நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் பாக்கிய ராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி அதற்கான நடவடிக்கை எடுத்தார்.
அவர், குண்டர் சட்டத்தின் கீழ் பாக்கியராஜை கைது செய்து பாளையங்கோட்டை சிறை யில் அடைத்தார். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந் துள்ளது.