search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் கலங்கரை விளக்கை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - கண்ணாடி லிப்டில் சென்று ரசிக்கலாம்
    X

    4 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் கலங்கரை விளக்கை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - கண்ணாடி லிப்டில் சென்று ரசிக்கலாம்

    • சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்கு கலன்கள் இயக்குநகரத்தின் கீழ் 1971-ம்ஆண்டு கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட நாளை (13-ந் தேதி) முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்

    கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்லும் வகையில் முழுவதும் கண்ணாடியால் ஆன லிப்ட் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கலங்கரை விளக்க த்தின் மேல் நின்று பார்வை யாளர்கள் சுற்றி பார்க்கும் வகையில் புதிதாக கேலரியும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் இருந்து இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்க கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் முக்கடல் சங்கமத்தையும், கன்னியாகுமரியின் முழு அழகையும், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் பார்த்து ரசிக்கலாம்.

    கலங்கரை விளக்கத்தை பார்வையிட பெரியவர் களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம், கேமராவுக்கு ரூ.20-ம் வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி கே.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×