search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவு கொட்டி தீர்த்தது குமரியை குளிர்வித்த மழை
    X

    நள்ளிரவு கொட்டி தீர்த்தது குமரியை குளிர்வித்த மழை

    • கோழிபோர்விளையில் 95.4 மில்லி மீட்டர் பதிவு
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது. நேற்று காலையில் வழக்கமாக வெயிலடித்து வந்த நிலையில் மாலையில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று 7 மணிக்கு மழை பொய்ய தொடங்கியது. இரவு 9 மணி முதல் சுமார் 1 மணி நேரமாக மழை கொட்டியதையடுத்து ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. கோழிப்போர்விளையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 95.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னிமார், மயிலாடி, குளச்சல், தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குளிர் காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டிய மழையின் காரணமாக அருவியல் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.87 அடியாக இருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 71 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை, ரப்பர் விவசாயி களுக்கும் மழை பயனுள்ளதாக அமைந்து ள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பேச்சிப்பாறை 35.8, பெருஞ்சாணி 9, சிற்றார் 1-21.4, சிற்றார் 2 -32.2, பூதப்பாண்டி 82, கன்னிமார் 38.6, கொட்டா ரம் 30.4, மயிலாடி 17.4, நாகர்கோவில் 59.4, புத்தன் அணை 7.6, சுருளோடு 11, தக்கலை 72.3, குளச்சல் 4.6, இரணியல் 28.2, பாலமோர் 8.6, மாம்பழத்துறை யாறு 53, திற்பரப்பு 73, ஆரல்வாய் மொழி 18, கோழி போர்விளை 95.4, அடையாமடை 37.2, குருந்தன்கோடு 34, முள்ளங்கினாவிளை 84.6, ஆனைக்கிடங்கு 50.4, முக்கடல் 28.7.

    Next Story
    ×