search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெல்மெட் அணியாமல் சென்று போலீசாரிடம் ரூ.8 ஆயிரம் அபராதம் கட்டும் வாலிபர்கள்
    X

    ஹெல்மெட் அணியாமல் சென்று போலீசாரிடம் ரூ.8 ஆயிரம் அபராதம் கட்டும் வாலிபர்கள்

    • வாகனத்தையும் பறிகொடுத்து நடுவழியில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
    • குமரி மாவட்டம் முழுவதும் தினமும் நடைபெறும் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென்கோடி யில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

    தமிழகத்தில் விற்பனை யாகும் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் தான் விற்பனை ஆகிறது.

    அதி வேகத்தில் செல்லும் நவீன ரக இருச்சக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களும் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இம்மாவட்டத்தில் வாகன விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக இருச்சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.

    மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் சாகசம் செய்யும் மாணவர்கள், வாலிபர்கள் இருச்சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கன்னியா குமரி மாவட்டத்தில் விபத்துகள் மூலமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி சென்றதே காரணம் என்பதை போக்குவரத்து போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    இதுபோன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீ சாரும் இணைந்து தற்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிர சாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இருச்சக்கர வாகனங்களில் வரும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு உடனடியாக ரூ.1000 அபராதம் விதிக்கலாம் என்றும் போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    இப்படி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் ஒரே சேர விடுத்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் என அனைத்து பகுதிகளி லும் இருச்சக்கர வாகன சோதனை தீவிரம் அடைந்தது.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000, லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5 ஆயிரம், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தால் ரூ.1500, ஒரே வண்டியில் 3 பேர் சென்றால் ரூ.1000 என அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதில் போலீசாரிடம் சிக்கும் வாலிபர்கள் பலரும் மொத்தமாக ரூ. 8 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

    முன்பெல்லாம் போலீசார் ஸ்பாட் பைன் விதித்தாலும் பணம் இல்லை என்றால் ஒரு செல்லாைன எழுதி கொடுப்பார்கள். அதனை கோர்ட்டில் செலுத்தி கொள்ளலாம்.

    இப்போது சோதனையில் சிக்குவோருக்கு செல்லான் கொடுப்பது கிடையாது. மாறாக ஆன்லைன் மூலம் அபராதத்தை உடனடியாக கட்டியாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படு கிறது. பணம் கட்ட வழி யில்லா விட்டால் வாக னத்தை போலீசார் பறி முதல் செய்து விடுவார்கள்.

    அபராத தொகையை கட்டிய பின்பு தான் வாகனத்தை எடுத்து செல்ல முடியும் என்பதால் சோதனையில் சிக்கிய மாணவர்கள் பலரும் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் யாரும் மனம் இரங்கக்கூடாது என்று உயர் அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். போக்கு வரத்து விதிகளை மதிக்கவேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர், தங்கள் மகன், மகள்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் இதுபோன்று அபராதம் கட்டி பணத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் வேதனை என்னவென்றால் வாலி பர்களுக்கு இணையாக இளம்பெண்களும் இச்சோதனையில் சிக்கி கொள்கிறார்கள். முன்பு இவ்வாறு சிக்கி கொள்ளும் பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.

    இப்போது அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. பணம் இல்லை யென்றால் பெற்றோருக்கு போன் செய்து அவர்களை வந்து அபராதத்தை கட்டி செல்லும்படி கூறுகி றார்கள். இதனால் நாகர் கோவில், தக்கலை பகுதி களில் இளம் பெண்களும் நடுவழியில் தவித்தப்படி நிற்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

    ஹெல்மெட் சோதனை ஒருபுறம் நடக்க அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்தியபடி வலம் வரும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை அகற்றிய பின்பு அதற்கும் அபராதம் பெறப்பட்ட பின்னரே அந்த வாகனங்கள் விடுவிக்கப்படுகிறது.

    Next Story
    ×