என் மலர்
உள்ளூர் செய்திகள்

செட்டிகுளம் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை
- அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு கேபி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. கல்வி நிறுவனங்கள் பஸ்நிறுத்தம் பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக காலை, மாலை செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவிகள், பெண்கள் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் 2 மனுக்கள் தனித்தனியாக அளிக்கப்பட்டன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்திலும், துணை ராணுவத்திலும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காக சேவையாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்கள் நாட்டுக்காக வீர மரணம் அடைந்துள்ளனர். அவ்வாறு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், வருங்காலத்தில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஜவான்ஸ் அமைப்பிற்கு நிலம் கொடுக்க வேண்டும். மேலும் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






