search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில்  பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
    X

    கோப்பு படம்

    நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

    • தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி கடந்த 12-ந்தேதி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கிடையே பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகள் என மொத்தம் 15 பேர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர் 1, மாணவிகள் 13 பேர் என மொத்தம் 14 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சுப் போட்டியில் முதல் பரிசு தொகை ரூ. 5 ஆயிரத்தை 10 -ம் வகுப்பு மாணவி அக் ஷரா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரத்தை 12 -ம் வகுப்பு மாணவி நீது, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரத்தை 11 -ம் வகுப்பு மாணவி நிபிஷா, சிறப்பு பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் 9 -ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் மற்றும் 7 -ம் வகுப்பு மாணவி லேகா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5ஆயிரத்தை முதுகலை ஆங்கிலம் துறை மாணவி கனிஷ்மா, இரண்டாம் பரிசுத் தொகை ரூ. 3 ஆயிரத்தை இளங்கலை கணித துறை மாணவி நேஹா, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரத்தை முதுகலை வணிகத்துறை மாணவர் டெல்ஜின் ஆகியோர் பெற்றனர். பின்னர் பரிசு தொகையையும், பாராட்டு சான்றையும் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்குகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×