என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகராஜா கோவிலில் பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள்
  X

  நாகராஜா கோவிலில் பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை மறுநாள் ஆவணி முதல் ஞாயிறு என்பதை முன்னிட்டு ஏற்பாடு
  • நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் நாகராஜா கோவில் நாக தோஷம் தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

  இந்த கோவிலில் வழி பட்டால் திருமணங்கள் கைகூடும் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குமரி மாவட்ட மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

  குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் புண்ணி யங்கள் கிடைக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் இந்த ஆண்டு நாகராஜா நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிக மாக இருக்கும்.

  எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது.கோவிலில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் நாகர் சிலைகளை சுத்தம் செய்யும் பணி, வர்ணங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டு உள்ளது. ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட் களே உள்ள நிலை யில் முன்னேற்பாடு பணி களை தீவிரமாக நடந்து வருகிறது. ஆவணி ஞாயிற் றுக்கிழமையான நாளை மறுநாள் 21-ந்தேதி நாக ராஜா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  21-ந்தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்படு கிறது.இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடக்கிறது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.

  இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் கோவில் மேலா ளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். பக்தர்களுக்கு வசதியாக குடிநீர் வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அபிஷேக அர்ச்சனை கட்டணமாக ரூ.400 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

  இதில் ஒரு லிட்டர் பால் பாயாசம் மற்றும் பாத்திரம் இலவசமாக வழங்கப்படும். தேங்காய் பழம் பிரசாதங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  Next Story
  ×