search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் நாகர்கோவில் வழியாக கேரளா சென்றார்
    X

    கோப்பு படம் 

    மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் நாகர்கோவில் வழியாக கேரளா சென்றார்

    • நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், மாவட்ட போலீசார் தீவிர விசாரணை
    • தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் ‘ரா’ உள்ளிட்ட உளவுத்துறையினரும் கேரளாவில் முகாமிட்டு விசாரணை

    நாகர்கோவில்:

    கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூரூவில் உள்ள நாகுரி பகுதியில் ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மங்களூரூவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட நாச வேைல என்பதும் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேசிய விசாரணை முகமை மற்றும் உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இதில் வெடி விபத்துக்கு உள்ளான ஆட்டோவில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவன் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (வயது 24) என்பதும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புயைவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து ஷாரிக் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவனது செல்போனை ஆய்வு செய்ததில், நாகர்கோ வில், கேரளா உள்ளிட்ட பல இடங்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மங்களூரூ போலீசார் நாகர்கோவில், கேரளா பகுதிகளுக்கு விரைந்தனர். அப்போது ஷாரிக், கேரளா செல்லும் போது நாகர்கோவில் வழியாக ரெயிலில் சென்றது தெரியவந்தது. இதனால் நாகர்கோவிலில் அவனுக்கு யாருடனாவது தொடர்பு இருக்கலாமா? என போலீ சார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு செல்போனுக்கு ஷாரிக் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் எண் யாருடையது என்பது தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் துணையுடன் மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் (22) என்பவர் தான் அந்த செல்போன் எண் வைத்திருப்பவர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசார், அவரை பிடித்தனர்.தொடர்ந்து அவரை ரகசிய இடம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்த ப்பட்டது.

    அப்போது அஜிம் ரகு மான், தான் வேலை பார்த்த கடை முதலாளி மனைவியின் செல்போ னுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அவருக்கு மொழி புரியாத தால், செல்போனை தன்னிடம் கொடுத்த தாகவும் கூறினார்.

    மேலும் அந்த போனை வாங்கி தான் பேசுவதற்குள் 'லைன்' துண்டிக்கப்பட்ட தால், தனது செல்போனில் இருந்து அந்த எண்ணை திரும்ப அழைத்ததாகவும் அப்போது யாரும் பேசவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். அவரது தகவலின் படி குறிப்பிட்ட கடை உரிமையாளரின் மனைவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    அவரும், அஜிம் ரகுமான் கூறிய தகவலையே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 30 மணி நேரத்துக்கு பிறகு அஜிம் ரகுமானை விடுவித்த போலீசார், விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் அழைப்போம், வேறு எங்கும் செல்லக் கூடாது என கூறி உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு ஷாரிக் பெயருக்கு பார்சல் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் அதனை வாங்கத் தான் ஷாரிக், நாகர்கோவில் வழியாக கேரளா சென்றதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மங்களூரூ போலீசார் கேரளா விரைந்தனர். இதற்கிடையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் 'ரா' உள்ளிட்ட உளவுத்துறை யினரும் கேரளாவில் முகா மிட்டு விசாரணையை தொடங்கினர்.

    இதில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருப்பது தெரிய வந்தது. அவன் எதற்காக கேரளா வந்தான்? யாருடன் பேசி னான்? அவனுக்கு முகவரி கொடுத்து உதவியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×