search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு
    X

    லோக் அதாலத்தின் போது நீதிபதிகள் விசாரணை நடத்திய காட்சி.

    நாகர்கோவிலில் இன்று லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு

    • தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக்அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காசோலை வழக்குகள், விபத்து காப்பீடு வழக்குகள்,குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் இன்று லோக்அதாலத் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை ஆகிய 5 நீதி மன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதியும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள் முருகன் தொடங்கி வைத்தார்.

    முதன்மை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பிராஜன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, குற்றவியல் நீதிபதி தாயு மானவர், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், காப்பீடு தொடர்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் இன்று 2084 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×