search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பாதிப்புகள் ஆய்வு செய்து சீரமைக்கப்படும்
    X

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை பாதிப்புகள் ஆய்வு செய்து சீரமைக்கப்படும்

    • மேயர் மகேஷ் உறுதி
    • பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி அலுவலகத்தில் வாரந் தோறும் வியாழக்கிழ மை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.

    வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டன. அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் கூறிய தாவது:-

    மனுக்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறைக்கு உட்பட்ட 103 மனுக்கள் வந்தன. அதில் 103 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் 101 மனுக்கள் வந்தது. 101 மனுக்களுக்கும் முடிவு காணப்பட்டது. அதுபோல் நகர அமைப்பு தொடர்பாக 43 மனுக்கள் வந்ததில் 38 மனுக்களும், சுகாதாரத் துறைக்கு 30 மனுக்களில் 28 மனுக்களும் , பொதுவான மனுக்கள் 8 வந்தது. இதில் அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதுவரை மொத்தம் 285 மனுக்கள் வந்துள்ளன. இதில் 278 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 7 மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. நாகர்கோவில் நகரப் பகுதியில் சாலை போடப்பட்டு வருகிறது. இதில் சாலை நடுவே போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை மற்றும் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் பாதிப்பு இருப்பதாக புகார்கள் வருகிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மேன் கோல் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைதீர்க்கும் கூட்டத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் இன்று ரூ.75 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்தது. 50வது வார்டுக்கு உட்பட்ட வண்டிகுடியிருப்பு தெற்கு தெரு வில் ரூ.2.5 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்தபணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அதேபோல் 42-வது வார்டுக்கு உள்பட இருளப்ப புரம் விவேகானந்தர் சாலையில் தார்தளம் அமைக்கும் பணி ரூ.30 லட்சம் செலவி லும், 20-வது வார்டுக் குட்பட்ட தம்மத்துக்கோணம் திருவள்ளுவர் தெருவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ரூ.13 லட்சம் செலவிலும், 23-வது வார்டுக் குட்பட்ட பரிவதவர்த்தினி சாலையில் ரூ.30 லட்சம் செலவிலும் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர் ஸ்டாலின் தாஸ், தி.மு.க. பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் பகவதி பெரு மாள், இருளப்பபுரம் ஊர் தலைவர் தனபாலன், பொருளாளர் பாரத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×