என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகள் மீட்பு
    X

    கோப்பு படம் 

    தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகள் மீட்பு

    • மீட்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
    • சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று அவர் வழக்கம் போல் பணிக்கு சென்று இருந்தார். வீட்டில் அவரது 11 வயது மகள் வீட்டில் இருந்தார்.பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார்.அவரது பெற்றோரும் வெளியே சென்று இருந்தனர்.

    இதையடுத்து இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடினார்.

    எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் அங்கு வந்து தேடிப் பார்த்தனர். ஆனால் இரு சிறுமிகள் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவிகள் மாயமானது குறித்த தகவல் அவர்களது புகை ப்படங்களுடன் சமூக வலை தளங்களில் பரவியது. இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது.

    மாயமான மாணவிகளை தேடும்படியில் போலீசாரும் அவரது உறவினர்களும் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் இரவு நாகர்கோவிலில் இருந்து மேல் மிடாலத்திற்கு சென்ற பஸ்ஸில் இரு சிறுமிகளும் பயணம் செய்தனர்.இதை பார்த்த பஸ் கண்டக்டர் சிறுமிகளிடம் விசாரித்தார்.அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனர்.அப்போது கண்டக்டர் அவரது வாட்ஸ்ஆப்க்கு வந்த பதிவை பார்த்தார்.

    அதில் மாணவிகள் வீட்டிலிருந்து மாயமான தகவல் தெரியவந்தது. உடனே பஸ் கண்டக்டர் அந்த இரு சிறுமிகளும் பஸ்ஸில் இருக்கும் தகவலை கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தக்கலை போலீசார் மேல்மிடாலம் பகுதிக்கு சென்று பஸ்ஸில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

    பின்னர் அவர்களை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்த தகவலை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×