search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் ராஜேஷ்குமார் எம்எல்.ஏ. பெயரில் பணம் வசூலிக்க முயன்றது யார்? - சைபர்கிரைம் போலீசார் விசாரணை
    X

    போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் ராஜேஷ்குமார் எம்எல்.ஏ. பெயரில் பணம் வசூலிக்க முயன்றது யார்? - சைபர்கிரைம் போலீசார் விசாரணை

    • சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் சமூக வலைதளத்தில் உருவாக்கி உள்ளனர். பின்னர் அதன் மூலம் பணம் உதவி கேட்டு தகவல் அனுப்பி உள்ளனர்.
    • என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது தான், போலி கணக்கு பற்றிய விவரம் தெரியவந்தது. எனவே யாரும் பணம் அனுப்ப வேண்டாம்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் சமூக வலைதளத்தில் உருவாக்கி உள்ளனர். பின்னர் அதன் மூலம் பணம் உதவி கேட்டு தகவல் அனுப்பி உள்ளனர்.

    இது பற்றி தெரிய வந்த தும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

    போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக விரோதிகள் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி உள்ளனர். அதன்மூலம் பண உதவி கேட்டு பலருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர்.

    இதனை பார்த்தவர்கள், என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது தான், போலி கணக்கு பற்றிய விவரம் தெரியவந்தது. எனவே யாரும் பணம் அனுப்ப வேண்டாம். யாராவது பணம் வழங்கினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×