என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
'பாரத் ஜோடோ' யாத்திரை சென்ற ராகுல்காந்தி உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
- கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும்
- தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும்
நாகர்கோவில் :
விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி தலைவர் ராகுல் காந்தியின் பிரம்மாஸ்திரமான 'பாரத் ஜோடோ 'யாத்திரையை பிரதிபலிக்கும் வகையிலும், பிரியங்கா காந்தியின் உணர்ச்சிகரமான பிரசாரத்தின் மூலமும் இன்று கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும். தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைக்கும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர்.
சிலிண்டர் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9 ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்னைகளை தூண்டி குளிர் காய நினைத்த பா.ஜ.க அரசை கர்நாடக மக்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். என்னென்ன சதி வேலைகள், என்னென்ன ஒடுக்குமுறைகள் எதற்கும் அடங்காமல், ஒடுங்காமல் கர்நாடக மாநிலத்தையே பம்பரம் போல் வலம் வந்து, இன்று மதசார்பின்மைக்கு எதிரான மாநிலங்களில் கர்நாடகமும் இணைந்திருப்பது தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணிபுரிவதற்கு வாய்ப்பாக ஹாசன் நாடாளுமன்ற தொகுதி மேலிடபார்வையாளராக என்னை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்று தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும், நாடு வளம் பெறட்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்