search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே மதுபான பார் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
    X

    போராட்டத்தில் பேரூராட்சி தலைவர் அகஸ்டின் பேசியபோது எடுத்த படம் 

    குலசேகரம் அருகே மதுபான பார் திறப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

    • 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
    • இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.

    இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

    இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.

    போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.

    Next Story
    ×