என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குமரி மாவட்டத்தில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
- பாளை. ஜெயிலில் அடைப்பு
- இதுவரை 70 பேர் மீது பாய்ந்தது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இது வரை கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் கைது செய் யப்பட்டவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகளில் உள்ள வர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 70 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தர விட்டார்.இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் செல்வராைஜ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.






