search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு என்.சி.சி. மாணவர்களின் தேசிய ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டம்
    X

    என்.சி.சி. மாணவர்களின் தேசிய ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டம் நடந்தபோது எடுத்த படம் 

    கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு என்.சி.சி. மாணவர்களின் தேசிய ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டம்

    • மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள்.
    • இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி:

    தேசிய மாணவர் படை (என்.சி.சி.) உதயமான 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை தேசிய ஒற்றுமை தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஒற்றுமை தொடர் ஓட்டத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தேசிய மாணவர் படை துணை டைரக்டர் ஜெனரல் கமாடர் அதுல்குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 250-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் ஒற்றுமை தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கினர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த தொடர் ஓட்டம் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, சின்னாளப்பட்டி, தேத்துப்பட்டி, வேலூர், ஐதராபாத், நாக்பூர், ஆக்ரா, வழியாக வருகிற ஜனவரி மாதம் 18-ந்தேதி டெல்லி சென்றடைகிறது.மொத்தம்உள்ள 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 60 நாட்களில் தொடர் ஓட்டம் மூலம் கடந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த இந்த ஒற்றுமை தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறையைச்சேர்ந்த சுற்றுலா காவலர்களும் பங்கேற்றனர்.

    Next Story
    ×