என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்து
- 10-ம் வகுப்பு மாணவன் பலி
- மற்றொரு விபத்தில் மூதாட்டி சாவு
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே மணிகட்டிபொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுதன். இவரது மகன் ஜெகந்தர் (வயது 16).
இவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.சம்பவத்தன்று ஜெகந்தர் தனது நண்பர் அர்ஜுன் (15) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு சென்றார். கோட்டார் வைத்தியநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ஜெகந்தர்,அர்ஜுன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி ஜெகந்தர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெகந்தர் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் கண்க லங்கினர். மாணவன் பலி யானதையடுத்து அவர்ப டித்து வந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட் டுள்ளது.
நாகர்கோவில் பாறையடி கணியாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பால் இவரது மனைவி பிரேமா (வயது 63). இவர் சம்பவத்தன்று வடிவீஸ்வரம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் படுகாயம் அடைந்த பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பிரேமாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. எனினும் சிகிச்சை பலன்இன்றி பிரேமா இன்று பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோட்டார் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






