search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவேண்டும்
    X

    திருவட்டார் ஆதிகேசவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவேண்டும்

    • 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிகுந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 450 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது.
    • திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விட மனு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 450 வருடங்க ளாகி விட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்து வதற்கு முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், அனைத்து தரப்பினரும் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வசதியாக ஜூலை 6ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அன்றைய தினம் திருவட்டார் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும். திருவட்டார் பஸ்நிலைய சந்திப்பிலிருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய வேண்டும்.

    கோயிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா க்கள் அமைக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×