search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்மழை எதிரொலியாக பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தொடர்மழை எதிரொலியாக பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
    • அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால், அணை பகுதிக ளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், தொடர் மழையினாலும் கோதை யாறு, வள்ளியாறு, பரளி யாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அதிகபட்சமாக குருந்தன்கோடு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. முக்கடல் அணை பகுதியில் 29.2 மில்லி மீட்டரும், மாம்பழத்துறை யாறில் 12.3 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 11.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 402 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொண்ட பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டி வருகிறது.இன்று காலை அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக உள்ளது. அணைக்கு 586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.54 அடியாக உள்ளது. அணைக்கு 188 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது.

    அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை கருத்தில் கொண்டு, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×