search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை சீரமைப்புக்கு மேலும் ரூ.11 கோடி ஒதுக்கீடு
    X

    மேயர் மகேஷ் 40-வது வார்டு பகுதியில் ஆய்வு செய்த போது எடுத்த படம் 

    நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை சீரமைப்புக்கு மேலும் ரூ.11 கோடி ஒதுக்கீடு

    • ஏற்கனவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில்மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 40-வது வார்டுக்குட்பட்ட வைத்திய நாதபுரம், வடலிவிளை, இசங்கன்விளை, பறக்கை ரோடு பகுதிகளில் இன்று காலை கவுன்சிலரும் மண்டல தலைவருமான அகஸ்டினா கோகிலவாணியுடன் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை முன்பு அமைக்கப்பட உள்ள ரவுண்டானாவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது. தற்போது சாலை சீரமைப்பு பணிக்கு ஏற்க னவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.தற்போது மேலும் ரூ.10 கோடியே 80 லட்சம் நிதி வந்துள்ளது. மொத்தத்தில் தற்பொழுது ரூ.41 கோடியே 80 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நிதியின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் எந்தெந்த சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முதற்கட்டமாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரவுண்டானா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இந்த ரவுண்டானா 30 அடி சுற்றளவில் அமைக்கப்படும்.

    கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எந்த வகையான நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அந்த நினைவு தினம் அந்த பகுதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கவுன்சிலர் விஜிலா ஜஸ்டஸ், பால்அகியா, பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உடனிருந்தனர்.

    Next Story
    ×