search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 23-ந் தேதி சாமி சிலைகள் ஊர்வலம்
    X

    பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 23-ந் தேதி சாமி சிலைகள் ஊர்வலம்

    • நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி நடைபெறும்
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாறிய பின்னர் நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    இதற்காக நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்ம நாபபுரம் அரண்மனை யில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோ வில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள், வெள்ளிக்குதிரை வாகனம், யானை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருவனந்த புரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜை செய்வது வழக்கம். நவராத்திரி விழாவுக்கு பின் னர் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் எடுத்து வரப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கார ணமாக இந்த நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற வில்லை. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. செப்டம் பர் மாதம் 23-ந்தேதி காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி திருவ னந்தபுரம் புறப்பட உள் ளது.

    முதல் நாள் குழித்துறை யில் ஓய்வுக்குபின்னர் புறப்படும் பவனிக்கு, 24-ந் தேதி குமரி-கேரள எல்லை யான களியக்காவிளையில் வரவேற்பும் அளிக்கப்ப டுகிறது. அன்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ் ணன் கோயிலில் ஓய்வுக்கு பின்னர் 25-ந்தேதி காலை திருவனந்தபுரம் புறப்படும் பவனிக்கு நகர பகுதியில் நேமம் என்ற இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பவனி செல்லும் பாதை யில் எல்லாம் பக்தர்கள் வர வேற்பு அளிக்கவும், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்க வும் வாய்ப்பு வழங்கப்ப டும். அக்டோபர் 5-ந்தேதி சரஸ்வதி பூஜைக்கு பின்னர் ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி காலை விக்ரகங் கள் பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி புறப்படும். இரண்டு ஆண்டு இடை வெளிக்கு பின்னர் பத்மநாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளிமலை குமாரசாமி வெள்ளிக்கு திரையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக் கிலும், சரஸ்வதி தேவி யானை மீதும் பவனியாக வலம் வருகின்றனர். சாலையின் இருபுறமும் நடைபெறுகின்ற தட்டம் பூஜை உள்ளிட்ட நிவேத்திய சமர்ப்பண நிகழ் வுகளும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி பவனி சம்பிரதாய முறையில் நடைபெற்றது. வழக்கமான கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பவனி நடைபெற உள்ளது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இது தொடர் பான ஆலோ சனை கூட்டம் திருவனந்த புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கேரள மந்திரிகள் ராதாகிருஷ்ணன், அகம்மது மற்றும் குமரி-கேரள அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×