என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி அருகே ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கியது
  X

  மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி அருகில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

  நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி அருகே ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்க முடிவு
  • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

  கலெக்டர் அலுவலக சாலை, வடசேரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே கற்களால் ஆன தடுப்புகள் அமைத்து இருபுறமும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி கலெக்டர் அலுவலக சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போல பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு மற்றும் செட்டிகுளம் சந்திப்பிலும் ரவுண்டானா அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறினார்.

  இந்த நிலையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே கல்கோவில் முன் ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இன்று நடந்தது.

  முதற்கட்டமாக ரவுண் டானா அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளால் ஆன சிறிய அளவிலான வேலி இடித்து அகற்றப்பட்டது.

  ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  மேலும் மாநகராட்சி மேயர் மகேசும் அங்கு வந்து பேசினார். அப்போது, "மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் ரவுண்டானா அமைக்கப்படும். அதற்காக தான் நிலத்தை தயார் செய்யும் பணி நடக்கிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரவுண்டானா வராது" என்றார்.

  பின்னர் போலீசார் முன்னிலையில் வேலி மற்றும் அங்கிருந்த கற்கள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கும் வகையில் அந்த பகுதியை தயார் செய்யும் பணி தொடர்ந்து நடந்தது.

  ரவுண்டானா பணிகள் முடிந்ததும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக மாற்றப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  வடசேரி காசி விஸ்வநாதர் கோவில் அருகே கழிவு நீர் ஓடை அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக கோவில் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இன்று அப்பகுதிக்கு குமரி கிழக்கு மாவட்ட செய லாளர் மேயர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உடனே அதனை சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகா ரிகள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

  Next Story
  ×