என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெங்கம்புதூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
- மாயமான மாணவி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
- சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
கன்னியாகுமரி:
தெங்கம்புதூர் அருகே உள்ள புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனுஷா (வயது 19) நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் காலை அனுஷா வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். மாலையில் அனுஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவர் தந்தை மணி அனுஷாவை பல இடங்களிலும், உறவினர் வீட்டிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
Next Story






