என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாரில் கோவில் விழாவில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; சட்டை கிழிப்பு - வாலிபர் கைது
    X

    கோட்டாரில் கோவில் விழாவில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; சட்டை கிழிப்பு - வாலிபர் கைது

    • ரோட்டில் நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிற்குமாறு கூறினார்கள்
    • அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கோட்டாறு வைத்தியநாதபுரம் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது.

    நேற்று இரவு திருவிழா வின்போது கச்சேரி நிகழ்ச்சி கள் நடந்தது. அப்போது வாலிபர்கள் சிலர் ரோட்டில் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக நடனமாடுவதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜன், போலீஸ் ஏட்டு சதீஷ் (வயது 28) ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற னர்.

    அங்கு ரோட்டில் நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிற்குமாறு கூறினார்கள்.இதனால் அங்கிருந்த வாலிபர்கள் சாலையை விட்டு ஒதுங்கி நின்றனர். வைத்தியநாதபுரம் வயல் தெருவை சேர்ந்த பிரதீஷ் (21), அவரது அண்ணன் பிரகாஷ் (24) ஆகிய இருவரும் போலீசிடம் தகராறு செய்தனர்.

    ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ் ஏட்டு சதீசை சரமாரியாக தாக்கியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அதற்குள் பிரகாஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.பிரதீசை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சதீஷ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

    முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் பிரதீஸ், பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து போலீசார் பிரதிசை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரகாஷை தேடி வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.

    Next Story
    ×