என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே விபத்துகள் - தொழிலாளி-வாலிபர் பரிதாப சாவு
    X

    மார்த்தாண்டம் அருகே விபத்துகள் - தொழிலாளி-வாலிபர் பரிதாப சாவு

    • மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் நடந்த உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்
    • பணங்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    குழித்துறை :

    கருங்கலை அடுத்த பாலப்பள்ளம், படூர்காட்டு விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 61), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலத்தில் நடந்த உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கிறிஸ்டோபர் மண்டபத்தின் வெளியில் நின்று கொண்டி ருந்தார்.

    அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டெம்போவை, மத்திகோடு தட்டான் பரம்புவிளை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26), என்பவர் இயக்கி உள்ளார். ஆனால் எதிர்பாராதவித மாக அவரது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ தாறு மாறாக ஓடியது.அதே வேகத்தில் அங்கு நின்ற கிறிஸ்டோபர் மீது டெம்போ மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந் தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கிறிஸ்டோபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    அருமனையை அடுத்த மாங்காலை அம்பலகாலை கோடிக்காமூலை பகுதியை சேர்ந்தவர் தனிஷ் (வயது 28), ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி. கல்லு விளை பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் (26), இவர் பணங்காலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபின் மற்றம் தனிஷ் காரில் சென்றுள்ளனர். காரை பிரபின் ஓட்டினார். பனங்காலை- மருதன்கோடு சாலையில் கார் சென்ற போது, எதிர்பாராதவிதமாக தங்கசாமி என்பவரின் வீட்டு காம்பவுண்ட்டு சுவரில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பின் இருக்கையில் இருந்த தனிஷ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தனீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரபினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பிரபின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×