search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பள்ளிக்கு மாலை அணிந்து சென்ற மாணவரை வெளியேற்றிய ஆசிரியர்
    X

    நாகர்கோவிலில் பள்ளிக்கு மாலை அணிந்து சென்ற மாணவரை வெளியேற்றிய ஆசிரியர்

    • பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து காதில் கம்மல் காலில் கொலுசு அணிந்துள்ளார்.

    விரதம் இருப்பதால் மாணவர் பள்ளிக்கும் அதனை கழற்றாமல் அப்படியே சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் அந்த மாண வனிடம் கம்மல் மற்றும் காலில் கிடந்த கொலுசை அகற்றிவிட்டு பள்ளிக்குள் வருமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மாணவன் கோவிலுக்கு விரதம் இருந்து அவற்றை அணிந்திருப்பதால் அவற்றை கழற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அந்த மாணவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவ னின் பெற்றோர் பள்ளிக் குச் சென்று ஆசிரியரு டன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்கு விரதம் இருப்பதால் மாணவன் அணிந்திருக்கும் கம்மல் மற்றும் கொலுசை அகற்ற முடியாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மற்ற பள்ளியில் அனைத்து மாணவர்களும் இதை அணிந்துதான் செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு ஆசிரியரோ தலைமையாசிரியரோ இதனை கழற்ற சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள் மட்டும்தான் உங்கள் பள்ளியில் கழற்ற சொல்கின்றனர், என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆசிரியருடன் மாண வரின் பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவனின் உறவினர்களும் அங்கு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×