என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே மின்கம்பம் மீது கார் மோதி ராணுவ வீரர் குடும்பத்துடன் படுகாயம்
- கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது
- விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது
கன்னியாகுமரி :
மண்டைக்காடு பகுதியை சேர்ந்த வர் விஜின் (வயது37) இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு தோட்டி கோடு வழியாக திங்கள் நகர் நோக்கி வரும்போது தபால் அலுவலகம் அருகே கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது. இதில் விஜின் மற்றும் குடும்பத்தார் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






