என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பூதப்பாண்டியில் முன்னாள் கவுன்சிலரிடம் செல்போனை நூதனமாக பறித்த மர்ம நபர்
- பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பூதப்பாண்டி :
பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சொர்பின் (வயது40). பூதப்பாண்டி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர், இன்று காலையில் தனது மனைவியை வேலை க்காக மோட்டார் சைக்கி ளில் அழைத்துச் ெசன்றார். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர், தனது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் தேவை ப்படுவதால், அந்த நபருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறி சொர்பின் வைத்திருந்த செல்போனை கேட்டு உள்ளார். அவரும் தனது போனை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிய அந்த நபர், போனில் பேசிய படியே அங்கிருந்து மாயமாகி விட்டார்.
தன்னிடம் செல்போன் வாங்கி நபரை சொர்பின் தேடினார். அப்போது தான், அந்த நபர் தனது செல்போனை நூதன முறையில் பறித்துச் சென்ற தை சொர்பின் அறிந்தார். அது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.