search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

    • 23-ந்தேதி முதல் நடக்கிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டேப்செட்கோ ) மூலம் தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.

    அதன்படி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 24-ந் தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 25-ந் தேதியும் , கல் குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும் , தோவாளை தாலுகா அலுவலகத்தில் 29- ந் தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . இந்த சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண் ணப்பிக்கும்போது சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப் பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×