என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு - ரவுடி தப்பி ஓட்டம்
    X

    தக்கலை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு - ரவுடி தப்பி ஓட்டம்

    • யாபேஸ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஏழானை பொற்றை பகுதியில் வந்து கொண்டிருந்தார்
    • கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் 15 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது

    கன்னியாகுமரி:

    தக்கலைஅருகே பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெருஞ்சிலம்பு ஈஞ்சையடி விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சந்திரசேகருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரசேகர் தாக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட வழக்கு பதிவு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சந்திரசேகரின் மகன் யாபேஸ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஏழானை பொற்றை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் மாறி மாறி வாக்குவாதம் ஏற்படவே சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து யாபோஸின் தலையில் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட யாபோசை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணை யில் சுரேஷ் மீது ஏற்கனவே தக்கலை, கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் 15 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொற்றிக்கோடு போலீசார் வலைவீசி சுரேசை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×