search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9½ கிலோ புகையிலை பறிமுதல்; ரூ.70ஆயிரம் அபராதம்
    X

    9½ கிலோ புகையிலை பறிமுதல்; ரூ.70ஆயிரம் அபராதம்

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில், நவ.26-

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 391 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வாரத்தில் 3 நாட்கள் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. கடைகளில் இருந்த ஒரு கிலோ 750 கிராம் புகையிலை பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈத்தாமொழி, சுண்டப்பற்றிவிளை பகுதியில் சோதனை நடந்தது. இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? அங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9½ கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடைகளில் குட்கா, புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறையாக ரூ.10 ஆயிரம், 3-வது முறையாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்

    Next Story
    ×