என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்
- நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக் பப்பட்டனர்.
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58) செங்கல் சூளை அதிபர். இவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆரல் வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன் (36), விஜயன் (25) உள்பட 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன் இருவர் மீதும் ஏற்கனவே பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர்களது பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.அதனை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து அன்பு, விஜயன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.






