search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
    X

    குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

    • நாகராஜா கோவில் திடலில் மேடை அமைப்பு பணியை பாதுகாப்பு படையினர் ஆய்வு
    • புதிய மாநகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டனர்

    நாகர்கோவில் :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 7-ந் ேததிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் பலரும் பங்கேற்கின்றனர். மறுநாள் (7-ந் தேதி) நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கி றார். தொடர்ந்து ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் குமரி மாவட்டம் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் முதலில் நாகராஜா கோவில் திடலில் அமைக்கப்பட்டு வரும் மேடை அமைப்பு பணிகளை பார்வையிட்ட னர். அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களான மாநகராட்சி அலுவலகம், தி.மு.க. மாவட்ட அலுவல கம் பகுதிகளிலும் பாது காப்பு படையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பு செயலாளருமான ஆஸ்டின் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×