search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியலில் 76 மி.மீ.மழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
    X

    களியலில் 76 மி.மீ.மழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    மேலும் 11 வீடுகள் இடிந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவ தும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரண மாக மாவட் டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மாலையில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளா னார்கள். இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையில் இருந்தது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன.

    நாகர்கோவிலில் இன்று காலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    களியல் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கி யது. அங்கு அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறி விப்பு பலகை வைக்கப் பட்டு உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    குளங்க ளுக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் குளங்களில் உடைப்பு ஏற்ப டாமல் இருக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறு, கோதையாறு மற்றும் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் கரை யோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    சானல்களில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

    தொடர் மழைக்கு ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்தநிலை யில் நேற்று ஒரே நாளில் 11 வீடுகள் சேதமடைந்துள் ளன.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.87 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 15.4, பெருஞ்சாணி 18.4, சிற்றார் 1- 43.4, சிற்றார்2- 50.2, பூதப்பாண்டி 30.6, களியல் 76, கன்னிமார் 7.2, கொட்டாரம் 13.4, குழித்துறை 48.8, மயிலாடி 15.8, நாகர்கோவில் 38.6, சுருளோடு 33.2, தக்கலை 36.2, குளச்சல் 8.4, இரணியல் 10.2, பாலமோர் 35.2, மாம்பழத்துறையாறு 65.4, திற்பரப்பு 63.8, ஆரல்வாய் மொழி 1.2, கோழி போர்விளை 32.4, அடையா மடை 14.3, குருந்தன் கோடு 24, முக்கடல் 15.2

    Next Story
    ×