search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
    X

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம் 

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

    • கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமான கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெரு மாள் கோவில் ஒன்றாகும்.

    கடந்த ஜூலை மாதம் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தினமும் கேராளவில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று விடுமுறை நாளையொட்டி பக்தர்கள் காலையில் இருந்தே வருகை தந்தார்கள். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வரும்போது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்கள் ஒற்றை கால்மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பாக தினமும் மதியம் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அன்னதானத்தை சுமார் 300 நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×