search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்
    X

    அரசன் பொன்ராஜ்

    நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்

    • மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் அறிக்கை
    • தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடக்கிறது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் அரசன் பொன்ராஜ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உத்தரவுபடி நாளை (3-ந்தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் எனது தலைமையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை புழக்கங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகக்கூடிய நிலையில் உள்ளது. மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு அடிமை யாகி வருவதால் அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    போதை மாத்திரை, போதை ஊசியால் தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே போதைப் பொருட்களை கட்டுப்படுத்த துரித நடவ டிக்கை எடுக்க வேண்டும், இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த போராட்டம் நடக்கிறது.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×