search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம்
    X

    மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டபோது எடுத்தபடம்.

    கன்னியாகுமரி அருகே உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம்

    • மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
    • பரம்பரை அறங்காவலரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது.

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகமும் வழிபாடு களும் நடந்தது.

    பரம்பரை அறங்காவ லரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து 51 குடங்களில் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படட்டது.

    இந்த ஊர்வலத்தை எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்துக்கு மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் காளியப்பன், மாநில இந்து முன்னணி பேச்சாளர் வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கன்னியா குமரி விவேகா னந்தர் பாறையிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அந்த பாறையில் பகவதி அம்ம னின் ஒற்றை கால் பாதம் இயற்கை யாகவே பதிந்துள்ள தாக கருதப்படு வதால் ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல்போற்றிமற்றும் கீழ் சாந்தி ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதையொட்டி ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துஉள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தா கேந்திர நிர்வாக செயலாளர் ராதா கிருஷ்ணன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்ம நாபன், விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் பூம்புகார் கப்பல்போக்கு வரத்து கழக துணை மேலாளர் பழனி, கடல் சார் வாரிய துறைமுக உதவி பாதுகாப்பாளர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×